மீனம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மீன ராசி அன்பர்களே நினைத்தவை கைகூடும் மாதமாக இந்த மாதம் இருக்கும். ராசிக்கு சனியின் பார்வை இருப்பது திருஷ்டியை ஏற்படுத்தும், ராசிக்கு 2 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் கோபம், எரிச்சல் போன்றவற்றினை ஏற்படுத்தும்;

நிதானத்துடன் செயல்படுதல் நல்லது. தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 8-ஆம் இடத்தில் உள்ள சுக்கிரனால் தொழில்துறை ரீதியாக தைரியம் குறைந்தவராகக் காணப்படுவீர்கள்.

தொழில்ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறப்புகளுடன் பிரச்சினை ஏற்படும். 4 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் அசையாச் சொத்துகளை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

ராசிக்கு 5 ஆம் இடத்தில் குருவின் பார்வை இருப்பதால் குழந்தைகள்ரீதியாக தன லாபம் கிடைக்கும். ராசிக்கு 8 ஆம் இடத்தில் சூர்யன் நீச்சம் அடைந்து இருப்பது எதிரிகளை ஓட ஓட விரட்டும்.

7 ஆம் இடத்தில் புதன் உச்சம் பெற்றுள்ளார், வாழ்க்கைத் துணை சிறந்த ஆலோசனைகளை வழங்குவார். தந்தைவழி ரீதியான பூர்விகச் சொத்துகள் வந்து சேரும்.

தொழில் துறையில் புத்திசாலித்தனமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியினைக் கொடுக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.