மீனம் ஆவணி மாத ராசி பலன் 2022!

நீண்ட நாட்களுக்குப் பின் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும். தொழில் ரீதியாக புதிய தொழில் செய்ய நினைப்போரும், அபிவிருத்தி செய்ய நினைப்போரும் கொஞ்சமும் யோசிக்காமல் துணிந்து செயல்படலாம்.

வேலைரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் சரியாகி, மன நிம்மதி மற்றும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள், பணப் புழக்கம் முந்தைய மாதங்களைவிட அதிகரிக்கும்.

தாய்வழி தந்தைவழி உறவுகளுடன் இருந்த பகை மாறும். சொத்துகள் ரீதியாக ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் சரியாகி நிலைமை சாதகமாக அமையப் பெறும். மனதில் இருக்கும் பாரங்கள் குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மனதில் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள். தொழில் கூட்டாளிகளுடன் உடன்படிக்கை செய்யும்போது கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். வீடு மாற்றம் ஏற்படும், புதிதாக வீடு கட்ட நினைப்போரின் கனவு நனவாகும் காலகட்டமாக இருக்கும்.

வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். திருமண ரீதியாக தடைபட்டு இருந்த அமைப்புகள் அனைத்தும் சரியாகும். பிள்ளைகள் கல்வியில் மேம்பட்டும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள். விநாயகர் வழிபாடு சகல விதத்திலும் நன்மை பயக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews