மீனம் ஆவணி மாத ராசி பலன் 2018!

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பணவரவு அதிகரிக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது, புதன், சூரியன் சாதகமான பலன்களை தர காத்திருக்கின்றனர்.

சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு நற்பலன்களைக் கொடுப்பார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் வரக்கூடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள்.

பணிபுரியம் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும். சிலருக்கு புதிய பதவி தேடி வரக்கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். தொழில் அதிபர்களுக்கு அரசு சார்ந்த சிக்கல்கள் தீரும். வேலை, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். பொருளாதார வளம் மேம்படும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆகஸ்ட் 20, 21, 22, 23, செப்டம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் எதிர்பாராத வகையில் நன்மை உண்டாகும்.

உங்கள் ராசிநாதன் குரு எட்டாம் இடத்தில் இருப்பதால் சாதகமற்ற பலன்களைக் கொடுப்பார். அவ்வப்பொழுது வீண் சந்தேகம், மன குழப்பம் வரக்கூடும். யாரையும் பற்றி புறம் பேசாதீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு வருகின்ற இடையூர்களை முறியடித்து வெற்றி அடைவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

திருமணப் பேச்சுவார்த்தையில் ஆகஸ்ட் 28-தேதிக்குப் பிறகு நல்ல முடிவு வரக்கூடும். மீனம் ராசி பெண்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கப் போகின்றது. சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். மாத தொடக்கத்தில் சிறிது தடை இருப்பதாக தோன்றினாலும், மாத இறுதியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடிவடையும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment