மீனம் ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்குப் பண வரவு இருக்கும் வகையில் மிகச் சாதகமான மாதமாக உள்ளது. புதன் பகவானின் இடப் பெயர்ச்சியால் வியாபாரம் விருத்தி அடையும்; வியாபாரத்துக்குத் தேவையான கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குழந்தைகளின் படிப்பு ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இருக்கும். வீடு, மனை வாங்க கடன் வாங்குவீர்கள். கட்டிய வீட்டினைப் புதுப்பிக்கவும், வாடகை வீடு என்றால் வேறு வீட்டிற்குச் செல்லவும் செய்வீர்கள்.

தாயாரின் ஆரோக்கிய விஷயத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய விஷயத்தில் சிறு சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும். குழந்தைகள் மேன்மை அடைவார்கள், குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுக்கும். குழந்தைகளால் பெருமை கொள்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலை தேடிக் கொண்டு இருப்போருக்கு தாங்கள் எதிர்பார்த்த கனவு வேலை நிச்சயம் கிடைக்கப் பெறும். இழந்த வேலையினை மீண்டும் பெறுவீர்கள்; சம்பள உயர்வு நீங்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews