மீனம் ஆடி மாத ராசி பலன் 2022!

குரு சனி ஸ்தானம் பெற்றுள்ளதால் உத்வேகம் கொண்டு இருப்பீர்கள், தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்தல், லாபம் அடைதல், புதிதாக தொழில் துவங்குதல் என நன்மைகள் நடக்கும்.

ஒவ்வொரு காரியத்திலும் தெளிவாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பல மாதங்களாக தள்ளிப் போன விஷயங்கள் தற்போது நடந்தேறும். பெற்றோர் ரீதியாக ஆதாயங்கள் கிடைக்கும்.

பூர்விக சொத்துப் பிரச்சினையில் வெற்றி காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் உங்களை அடுத்த கட்டத்தினை நோக்கிச் செல்லவும் வெற்றிக் கனியை சுவைக்கவும் வழிகோலும்.

மனைவி – கணவன் இடையேயான அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பல ஆண்டுகளாக இருந்த பிரச்சினைகள் சரியாகும். பெற்றோர் ரீதியான உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

திருமணம் சார்ந்த காரியங்களைத் தள்ளிப் போடுதல் வேண்டும். குழந்தைப் பேறு ரீதியாக எதிர்பார்த்து இருப்பவர்கள் சந்தானலட்சுமி அம்மனுக்கு விரத வழிபாடு செய்தல் வேண்டும்.

சுபச் செலவுகளாக வண்டி, வாகனங்கள் வாங்குதல் நடந்தேறும். வரவு செலவு சார்ந்த விஷயங்களில் தாமதம் ஏற்படும். நீண்ட கால கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.