உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!

தியானம் செய்றதுன்னா எல்லாருக்கும் ஆர்வம் என்று சொல்ல முடியாது. அதை யார் லயித்து செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அந்த ஆர்வம் இருக்கும். இது பிறப்பிலேயே வருவதுண்டு. நல்ல குருமார்களின் துணையுடன் கற்று வரும்போது இதன் உச்சக்கட்டத்தை நாம் எளிதில் அடையலாம்.

தினசரி செய்யும்போது நம் உடல் மனம் எத்தகைய மாற்றத்தை அடைகிறது? நாள் முழுவதும் தியானம் செய்ய முடியுமா என்பது போன்ற ஆச்சரியத்தக்க கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவின் விளக்கங்கள் பொருத்தமாக உள்ளன. இனி அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Sadguru2
Sadguru2

தியானம் என்பதன் பொருள் உண்மையில் எதையும் குறிக்கவில்லை. கண்களை மூடி உட்கார்ந்தாலே நாம அவங்க தியானத்துல இருக்காங்கன்னு சொல்றோம். தியானத்தை நாம் செய்ய முடியாது.

அது ஒரு தன்மை. இது குறிப்பிட்ட ஒரு செயல்முறையின் விளைவு. அதாவது ஒரு செயல்முறையைத் தொடங்க முடியும். நடத்த முடியும். ஆனால் ஒரு தன்மையைத் தொடங்க முடியாது. நடத்த முடியாது. அது ஒரு விளைவு தான்.

இது எப்படின்னா உங்க தோட்டத்துல பூக்கள் வேணும்னா நீங்க அங்க உட்கார்ந்து மலர் தியானம் செய்ய தேவையில்லை. உங்க தோட்டத்துல பூக்கள் வரணும்னா நீங்க பூக்களைப் பத்தி நினைக்க வேண்டிய தேவையில்லை. நீங்க நினைக்க வேண்டியது எல்லாம் மண், உரம், நீர், சூரிய ஒளி அவ்ளோதான்.

இந்த மூலப்பொருள்களை நீங்க சரியா வழங்குனா பூக்களும், பழங்களும் அதனோட விளைவா வரும். ஆனா இன்னிக்கு உலகம் இலக்கை நோக்கி மாறிடுச்சு. அப்படி இருக்குறதால அவங்க மண்ணுல ஆர்வம் காட்றதில்ல.

கண்டிப்பா உரங்கள் மேலும் ஆர்வமில்ல. அவங்க பூக்கள் மற்றும் பழங்களையும் மட்டும் தான் விரும்புறாங்க. மண், உரம், தண்ணீர், சூரிய ஒளி இல்லாத பூக்கள் வேணும்னா நமக்கு பிளாஸ்டிக் பூக்கள் தான் கிடைக்கும்.

பயன்பாடு என்னன்னா இது பல்வேறு வகையில் உதவ முடியும். 5 வருஷம் உத்தரவாதம். நிஜமான பூக்கள் ஒரு தொல்லை. அது தினமும் நல்ல வளருதான்னு 5 முறையாவது பார்க்கணும். என்ன நடக்குது? எப்படி வளருதுன்னு பார்க்கணும். ஆனா பிளாஸ்டிக் பூக்கள் வச்சிருந்தா உங்க வாழ்க்கை மாதிரி இல்லாம அதுக்கு 5 வருஷம் உத்தரவாதம் இருக்கும்.

உயிரோட இருந்தா நீங்க செய்ய வேண்டியது நிறைய இருக்குது. கண்ணுக்குத் தெரியாத வைரஸைக்கூட விரட்டணும். இறந்துட்டீங்கன்னா உங்களைப் பதப்படுத்தி வச்சா மட்டும் போதும். அதனால அடிப்படையா தியானமும் செயல்முறையும் ரொம்பவாழ்க்கையை சார்ந்து இருக்குது.

Sadhguru2
Sadhguru2

இன்னிக்கு நீங்கள் பெரும்பாலும் பொருள் சார்ந்தவரா இருக்குறீங்க. இல்ல குறைந்தபட்சம் மனஓட்டம் சார்ந்தவரா இருக்குறீங்க. அது உணர்ச்சி சார்ந்ததா கூட இருக்கலாம். உடல் சார்ந்ததா இருக்கலாம். இவையும் பொருள் தன்மையுடையது தான். பெரும்பாலானோரின் வாழ்க்கை இப்படி தான் ஆகிவிட்டது.

வாழ்க்கையைப் பற்றி மக்களோட புரிதல் என்னன்னா யாராவது இது என் வாழ்க்கைன்னு சொன்னா அவங்க வேலையை சொல்றாங்கன்னு நாம புரிஞ்சுக்கணும்.

அவங்க நாட்டோட பொருளாதாரத்தைப் பத்தி, கணவன், மனைவியைப் பத்தி, காரைப் பத்தி, நாயைப் பத்தின்னு என்ன வேணாலும் இருக்கலாம். ஆனா இதுக்குள்ள என்ன துடிச்சிக்கிட்டு இருக்குதோ அதுதான் வாழ்க்கை.

மத்ததெல்லாம் நம்ம வாழ்க்கையை மேம்படுத்த நாம செஞ்ச ஏற்பாடுகள் தான். அது கல்வி, தொழில், உறவுகள், திருமணம், குழந்தைகள், செல்வம்னு எதுவா இருந்தாலும் இது எல்லாமே ஒண்ணுக்குப் பின் ஒண்ணா தொடர்ந்து வரும். நம்ம வாழ்க்கையை மேம்படுத்தும்கற நம்பிக்கையில.

ஆனா பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துறதுக்குப் பதிலா இந்த ஏற்பாடுகளிலேயே சிக்கிக்கிறாங்க. இந்த சின்ன ஏற்பாடுகள் வாழ்க்கை செயல்முறையைக் காட்டிலும் பெரிசா ஆயிடுச்சு.

Meditation
Meditation

நீங்கள் தியானம் செய்ய முடியாது. தியானமா மாறலாம். ஏன்னா தியானம்கறது ஒரு தன்மை. ஒருவருடைய உடல், மனம், அப்புறம் சக்தி ஆற்றல்களை ஒரு குறிப்பிட்ட அளவு முதிர்ச்சிக்கு வளர்த்திட்டா நீங்கள் இயற்கையாகவே 24 மணி நேரமும் தியானத்துல இருப்பீங்க.

தியானம்னா கண்களை மூடிக்கிட்டு ஒரே இடத்துல மட்டுமே இருக்கணும்கறது இல்ல. தியானம்கறது ஒரு அற்புதமான சக்தி ஊட்டுற விஷயம்.

உலகத்துல என்ன தேவை இருக்குதோ எதுவா இருந்தாலும் அதை உங்களால செய்ய முடியும். என்னவா இருந்தாலும் குறிப்பிட்ட சூழ்நிலையில என்ன தேவையோ அதை நீங்க செய்யலாம். ஆனா அந்த செயல்பாட்டால நீங்க தீண்டப்படாம இருக்கலாம்.

இந்த சக்தி இந்த ஆற்றல் இல்லேன்னா உண்மையிலேயே மனிதன் ஊனமானவன் தான். ஏன்னா உலகத்துல நீங்க நினைக்கிற புரிஞ்சிக்கிற செயல்படுற விஷயங்கள் எல்லாமே உங்க மேல பெரிய அளவில தாக்கத்தை ஏற்படுத்தினா இயற்கையாவே நீங்க என்ன தேவையோ அதை செய்யத் தயங்குவீங்க. இயற்கையாவே நீங்க செய்ய வேண்டிய விஷயங்களை செய்யத் தவிர்ப்பீங்க.

ஒரு வகையில உலகத்துல உங்களோட செயல்பாடுகள், உங்க மனசோட உணர்ச்சிகளோட செயல்பாடுகள் ஒவ்வொரு கணமும் உங்க மேல தாக்கத்தை ஏற்படுத்துகிற நிலையில நீங்க இருக்குறப்போ ஏதோ ஒரு வகையில உங்களை நீங்க ஊனமாக்கிப்பீங்க. ஏன்னா இயற்கையாவே உங்க வாழ்க்கையோட செயல்பாடுகளை நீங்க கட்டுப்படுத்துவீங்க.

ஏன்னா உங்க எண்ணம், உணர்ச்சி, செயல், வாழ்க்கையோட உங்களோட ஈடுபாடு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். தெரிஞ்சோ தெரியாமலோ துன்பத்தைப் பற்றிய பயம் ஏற்பட்டா உங்க வாழ்க்கையோட நோக்கங்களையும், சாத்தியங்களையும் நீங்க கட்டுப்படுத்திப்பீங்க. தியானம்கறது இதுதான்.

ரொம்ப எளிமையா சொல்லணும்னா நீங்க இங்க உட்கார்ந்தா உங்க உடல் இங்க இருக்கும். உங்க மனம் அங்க இருக்கும். நீங்க யாருங்கறது உங்க உடல், மனம் இந்த இரண்டு பரிமாணத்துல இருந்தும் கொஞ்சம் விலகி இருக்கும்.

உடல் அப்புறம் மனதோட குவியல்கள் உங்களுக்கும் இதுக்கும் இடையில ஒரு சிறிய இடைவெளி எழுந்தா அது தான் துன்பத்தோட முடிவு. அந்த நிலை தான் தியானம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.