உடல் எடையை குறைக்க மருந்து: இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

காஞ்சிபுரத்தில் உடல் எடையை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்துள்ள பகுதியில் சேர்ந்தவர் பாளையம். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கடைசி மகன் சூர்யா ( வயது 20). இவர் தனியார் தொழிற்சாலையில் பால் வினியோகஸ்தராக இருந்து வருகிறார்.

மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் நீக்கம்!!

இந்நிலையில் உடல் பருமனை குறைப்பதற்காக சூரியா தனியார் மருத்துவ மனையை அனுகி பல்வேறு மருந்துகளை எடுத்து வந்திருக்கிறார். அந்த வகையில் அருகில் இருப்பவர்கள் உடல் பருமனை குறைப்பதற்காக பிரபல மருத்துவ மனையில் ஒரு மாதம் மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும் என தெரிவித்து உள்ளனர்.

அதன் படி, கடந்த 10 நாட்களாக மருந்து எடுத்துக்கொண்ட நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

குஷியோ குஷி! நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!!

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது போலீசார் சந்தேக மரணம் என கூறி வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.