மக்களை தேடி மருத்துவம்; எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம்! மருத்துவ கலந்தாய்வு எப்போது?

தமிழகத்தில் சில வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த தடுப்பூசிகள் வீடுகளிலேயே சென்று செலுத்தப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தடுப்பூசி முகாம்

அதன்படி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் 32 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன்படி இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

சுப்பிரமணியன்

சென்னையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியலை தயாரித்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாட்டில் இதுவரை நடந்து முடிந்த ஏழு மெகா தடுப்பூசி முகாம்களும் வெற்றி பெற்றுள்ளன என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தீபாவளி விடுமுறைக்கு பின் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள் ஒதுக்கீடு பின்பற்றுவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிஇடம் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment