நெல்லிக் கனியின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

6ef8963d90f72c4a2195cd3cf699d0ab

நெல்லிக் கனிகளில் இரண்டு வகை உண்டு, ஒன்று புளிக்கும் தன்மை கொண்டது, அடுத்து கசக்கும் தன்மை கொண்டது. இப்போது நாம் கசக்கும் தன்மை கொண்ட கசப்பு நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

நெல்லிக்காய் உடல் சூட்டினைத் தணிப்பதாக உள்ளது, மேலும் பித்தம், கபம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயினை எடுத்துக் கொண்டால் சிறப்பான பலனைப் பெற முடியும்.

மேலும் யாருக்கேனும் நாள்பட்ட சளி, இருமல் தொல்லை இருப்பின் நெல்லிக்காயினைக் கொண்டு ஜூஸ் செய்து குடிக்கவும், அதேபோல் இரும்புச் சத்தினை உடலில் தக்க வைக்க வேண்டுமெனில் நெல்லிக்காயினை எடுத்துக் கொண்டால் இரும்புச் சத்துள்ள பொருட்களின் சத்து முழுமையும் உடலில் உட்கிரகிக்கப்படும்.

மேலும் நெல்லிக்காயினை தேனில் ஊறவைத்து தினசரிக்கு ஒன்று என்ற அளவில் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆனது நிச்சயம் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் நெல்லிக்காயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள், தினமும் நெல்லிக்காயினை முழுமையாகவோ அல்லது ஜூஸாகவோ குடித்து வந்தால் கொட்டிய இடத்திலும் தலைமுடி புதிதாக வளரச் செய்யும். மேலும் இளநரைக்கும் இது பெரும் தீர்வாக இருந்து வருகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.