பாகற்காயின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போவீங்க!!

7f8a32c8f9de93a80251c79a877324db

பாகற்காய் அதிக அளவில் கசப்புத் தன்மை கொண்ட காயாக இருந்து வருகின்றது. இதனால் பலரும் அதனை விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் இதன் நன்மைகளோ மற்ற காய்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது.

பாகற்காய் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கின்றது. இதனால் வாரத்தில் ஒருநாள் என்ற அளவில் பாகற்காயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் பாகற்காய் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது.

மூல நோய் பிரச்சினை உள்ளவர்களும், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் பாகற்காயினை ஜூஸாக குடித்து வருதல் நல்லது.

மேலும் குழந்தைகளுக்கு வரும் கீரிப் புழு பிரச்சினைகளுக்கு பாகற்காய் ஜூஸினை சிறிதளவு என்ற அளவில் கொடுத்து வந்தால் புழுக்கள் செத்துவிடும். மேலும் குடல் அல்லது வயிற்றில் புழுக்கள் இருப்பின் பாகற்காயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் முதியவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் செரிமானம் மேம்படுவதோடு, பசியும் தூண்டப்படும். பாகற்காயில் குழம்பு, பொரியல், வறுவல், ஜூஸ் எனப் பலவகையான ரெசிப்பிகளை செய்யலாம், இவற்றில் ஏதாவது ஒரு வகையில் பாகற்காயினை கட்டாயம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.