துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

7f51d498759929317f9bc9e1f8d143ec-1

துளசி கோயில்களில் வைத்து வழிபடக்கூடிய செடி வகையாகும். கிராமப்புறங்களில் செலவே இல்லாமல் கிடைக்கும் துளசியின் மருத்துவ குணங்களோ ஏராளம். 

துளசி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக் கூடியது. இது கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் சாப்பிட்டபின்னர் செரிமானம் ஆகவில்லை என்னும்போது துளசியினை ஒரு கைப்பிடி எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தி மேம்படும். நீரிழிவு ஏற்பட்டபின்னர் சர்க்கரை அளவினைக் குறைத்தல், இனிப்புகள் சாப்பிடாமல் ஒதுக்குதல் என கஷ்டப்படாமல் துளசி இலையினை அவ்வப்போது சாப்பிடு வரும்பட்சத்தில் சர்க்கரை நோய் அண்டவே செய்யாது.

வெயில் காலங்களில் வழிந்தோடு வியர்வையால் நாற்றம் ஏற்பட்டால் துளசி இலை கலந்தநீரில் குளித்து வரவும், மேலும் இது உடலில் ஏற்படும் கோடைகால நோய்களான வியர்க்குரு, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக உள்ளது.

மூச்சுவிடுதல் சம்பந்தப்படட் பிரச்சினைகள். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உடையவர்கள், சளி, இருமல், மார்புச் சளி பிரச்சினை உள்ளவர்கள் துளசியினை கட்டாயம் தொடர்ந்து எடுத்து வருதல் வேண்டும்.
 
குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சினைகள் இருக்கும்பட்சத்தில் துளசியினைக் கசக்கி பாலாடையில் ஊற்றிக் கொடுக்கவும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.