கற்றாழையின் மருத்துவப் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

55c9b04c8d1d2bd20ce808068e1c7f10-1

கற்றாழை வயல்வெளிகளில் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி வகையாகும். இந்த கற்றாழையின் மருத்துவ குணங்களோ நாம் யாரும் அறிந்திருப்பதைவிட மிக அதிகமாகும்.

கற்றாழையினை துண்டுகளாக நறுக்கி கூழாக்கி தலைமுடியில் தேய்த்து வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சினைகள் சரியாகி தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லை, நுனி முடி வெடித்தல், செம்பட்டை முடி போன்ற பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக உள்ளது.

கற்றாழையில் தயாரிக்கப்படும் எண்ணெய் இளநரையினைப் போக்குவதாக உள்ளது. மேலும் கற்றாழையின் தோலை சீவிவிட்டு அதன் சதைப்பற்றினை எடுத்து தண்ணீரில் கழுவி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

மேலும் சர்க்கரை நோயாளிகள் கற்றாழைப் பாயாசம், கற்றாழைக் குழம்பும் வைத்து சாப்பிடலாம்.  மேலும் கற்றாழை கண் குளிர்ச்சியினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

மேலும் முகத்தில் உள்ள கருமை, வறண்ட சருமம், முகப் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளுக்கு கற்றாழையின் சதைப்பற்றினைத் தேய்த்துவரவும்.

மேலும் நாள்பட்ட காயத் தழும்பு, தீக்காயங்கள் ஏற்பட்டவர்களும் கற்றாழையினைப் பயன்படுத்தி வந்தால் மிகச் சிறந்த தீர்வினைப் பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.