Connect with us

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு? வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

indians ukraine 4

செய்திகள்

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு? வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு? வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் உக்ரேன் விவகாரம் பற்றி இந்தியாவின் நடுநிலைத் தன்மை பற்றி பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

உக்ரைன் விவகாரம் உட்பட எந்த சிக்கலுக்கும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரேன் போரால் இந்தியா உள்பட உலக நாடுகள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ய ரொமேனியா, போலந்து, கஜகஸ்தான், ஹங்கேரி அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

உக்ரேனில் இருந்து வந்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் அரசு சிறப்பு சலுகை வழங்கியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். மூன்றாம் ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு தளர்வு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன்களில் உக்ரைன் நெருக்கடி தாக்கத்தை மதிப்பிட வங்கிகளை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் படிப்புகளை ஆன்லைன் முறைக்கு மாற்ற மறுத்துள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top