மருத்துவப்படிப்பு கலந்தாய்வு: 27ஆம் தேதி தொடக்கம்! 30 ஆம் தேதி இணையவழியில் பொது கலந்தாய்வு!!

இன்றைய தினம் காலையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் புதிய 11 கல்லூரிகளில் உள்பட மொத்தம் 37 மருத்துவக் கல்லூரிகளில் 5175 இடங்கள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 200 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீத இடங்களுக்கு கடந்த 19ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

இளநிலை மருத்துவம் பல்மருத்துவ படிப்புகளில் எஞ்சிய 85%  இடங்களை நிரப்ப தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீட் தேர்வில் தகுதி பெற்ற சுமார் 40 ஆயிரத்து 852 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

அரசு ஒதுக்கீட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 16 ஆயிரத்து 79 பேரும், சிபிஎஸ்இ பாடத் திட்ட மாணவர்கள் 8 ஆயிரத்து 453 பேரும் இடம் பெற்றனர் என்றும் அவர் கூறினார். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் 14 ஆயிரத்து 913 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தர வரிசையில் 1806 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும் 28, 29 ஆகிய தேதிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுக் கலந்தாய்வு முதல் முறையாக இணைய வழியில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்குகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment