Connect with us

உக்ரைன் மருத்துவ மாணவர்கள்… உச்சநீதிமன்றம் அதிரடி!!

Ukraine

செய்திகள்

உக்ரைன் மருத்துவ மாணவர்கள்… உச்சநீதிமன்றம் அதிரடி!!

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரிய வழக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 7 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது.

இந்நிலையில் ஜெனவோ ஒப்பந்தத்தின் படி இந்த மாணவர்களை போரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என வழக்கறிஞர் கூறினார். அப்போது பேசிய நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் போர்கலத்தில் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.

அதே சமயம் மத்திய அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட மாணவர்களை 3 வகையாக பிரிந்துக்கொள்ளலாம் என்றும் உள்ளூர் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு இந்தியாவில் இத்தகைய வாய்ப்பை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவர்கள் ஆன்லைனில் கல்வியை தொடரவும், உள்ளூர் மருத்துவ பயிற்சி மேற்கொள்ளவும் அதே போல் 2,3 ஆண்டு மாணவர்கள் கல்வி தொடர்வதற்கு சிக்கல் இருப்பதாக கூறிய அவர் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களில் சேர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

அப்போது பேசிய நீதிபதிகள் 20 ஆயிரம் மாணவர்களின் கல்வியை தொடர எப்படி ஒரே அதிகாரி கையாள முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார். இது தொடர்பாக இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top