Connect with us

மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

sexual harassment

தமிழகம்

மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல், அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

மருத்துவக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்தது உறுதியானது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி  பேராசிரியர் சதிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்… மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி…

தருமபுரியில், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட்டங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்..

பணியிடை நீக்கத்திற்குள்ளான  பேராசிரியர் மீது சமீபத்தில் மருத்துவ மாணவி புகார் அளித்தது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் பேராசிரியர் சதீஷ் தவறிழைத்திருப்பது உறுதியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், யார் தவறிழைத்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பேட்டியளித்தார்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top