Connect with us

மருத்துவ மேற்படிப்பு முறைகேடு-CBI-க்கு ஏன் மாற்றக்கூடாது? :நீதிபதிகள்

govenrment doctors

Tamil Nadu

மருத்துவ மேற்படிப்பு முறைகேடு-CBI-க்கு ஏன் மாற்றக்கூடாது? :நீதிபதிகள்

மருத்துவ மேற்படிப்பு முறைகேடு-CBI-க்கு ஏன் மாற்றக்கூடாது? :நீதிபதிகள்

நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ராணுவ, தீயணைப்பு வீரர்களின் வாரிசுகளுக்கு விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

அதற்கு அடுத்த நாள் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடுகான கலந்தாய்வு நடைபெற்றது. இறுதியாக பொது கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் பல கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி மருத்துவ மேற்படிப்பு முறைகேடு வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நட தேர்வு குழு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஹை கோர்ட் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக முறைகேடு எழுந்துள்ளது. 2020 2021 ஆம் கல்வியாண்டில் 113 இடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top