12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அல்ல; இட ஒதுக்கீட்டாலேயே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு!: கார்த்தி சிதம்பரம்

மருத்துவப் படிப்பினை கனவாகக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பெரும் எதிரியாக அமைந்துள்ளது நீட்தேர்வு. நீட்தேர்வு காரணமாக தமிழகத்தில் வருஷந்தோறும் மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதன் மத்தியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். அதன்படி இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். அதன்படி இட ஒதுக்கீடுகள் மூலமாகத்தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் சிவகங்கை  சிவகங்கை நாடாளுமன்றத் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட் தேர்வு அடிப்படையிலும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்லவில்லை என்று அவர் கூறினார்.

கோச்சிங் சென்டர் சென்றால் மட்டுமே ஒன்றிய அரசின் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய கூடிய சூழல் உருவாகி உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் பெரியார் பற்றியும் காங்கிரஸ் தம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

பெரியார் என்று ஒருவர் இருந்ததால் தான் சமூகநீதி சிந்தனை உள்ளது என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார். வட மாநிலத்தில் உள்ள பாஜகவினர் பெரியாரை அவதூறு பேசி, அவர் சிலையை வீழ்த்த நினைக்கின்றனர் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment