தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் கடந்த இரண்டு வாரங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இரண்டாவது வாரம் ஆகியும் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து வருகின்றனர் என்றும் குறிப்பாக சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நெல்லையில் உள்ள ராம் முத்துராம் சினிமாவில் இன்றைய ஒரு காட்சி முழுவதையும் அந்நகரிலுள்ள மெடிக்கல் காலேஜ் மாணவ மாணவிகள் மொத்தமாக புக் செய்து திரையரங்குகளில் குவிந்தனர்.
அவர்கள் அனைவரும் திரையரங்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கல்லூரி மாணவ மாணவிகளிடையே இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது