Connect with us

மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா!! பஞ்சாப் அமைச்சரின் வலுக்கட்டாய நடவடிக்கை தானா?

rajbagadhur

செய்திகள்

மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா!! பஞ்சாப் அமைச்சரின் வலுக்கட்டாய நடவடிக்கை தானா?

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் உருமாறி உள்ளது. இதற்கு முன்னதாக அங்கு காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தினந்தோறும் பஞ்சாபில் புதுப்புது திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றன. இதே சமயத்தில் திடீரென்று மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.

அவரின் ராஜினாமா பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பஞ்சாப் பாபா பாரத் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜ் பகதூரின் திடீர் ராஜினாமாவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மருத்துவ கல்லூரியின் ஆய்வில் பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் நடவடிக்கையால் ராஜினாமா? என தகவல் கிடைத்துள்ளது. மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்த படுக்கையில் நிர்ப்பந்தம் செய்து படுக்க வைத்ததால் ராஜினாமா செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பஞ்சாப் அமைச்சர் சேதன் சிங் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top