எகிறும் ‘இன்ஃப்ளூயன்சா’ தொற்று; தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்!

தமிழ்நாட்டில் டெங்கு, இன்ப்ளுயன்ஸா, நிமோனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா ஏ என்ற H3N2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்ஹ்டிய மருத்துவ ஆராய்ச்சிக்குழு கூறியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மட்டும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு முகாமிற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை மாவட்ட சுகாதார நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள் என அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.