நவம்பர் 4ஆம் தேதி இறைச்சிக்கடைகள் திறக்க தடை: அதிர்ச்சி தகவல்!

நவம்பர் 4ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளி தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இறைச்சி கடைகள் திறக்க கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி என்றாலே அதன் ஒரு பகுதி இறைச்சி என்பதும் அன்றைய தினம் விடிய விடிய இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்து வழியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழை எளியவர்கள் கூட அன்றைய தினம் இறைச்சிகளை எடுத்து வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு கடையிலும் இறைச்சிகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம் மகாவீர் நிர்மாண் தினம் என்பதால் சென்னை மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் இதுகுறித்து தலைமைச் செயலாலரிடம் வேண்டுகோள் விடுத்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment