Connect with us

சைவ உணவில் இறைச்சி: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

food

தமிழகம்

சைவ உணவில் இறைச்சி: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சைவ உணவகம் ஒன்றில் இறைச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர், துக்க நிகழ்வு ஒன்றிற்கு 35 பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளார். அதில் பீட்ரூட் பொரியலில் இறைச்சி இருந்த‌தாக முரளி புகார் அளித்தார்.

இந்நிலையில் 6 மணி நேரத்திற்கு முன்பு உணவு அனுப்பியதாகவும், 6 மணி நேரத்திற்குப் பிறகு உணவில் இறைச்சி இருப்பதாக புகார் அளிப்பது முறையல்ல என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமாதானம் பேசினர். பின்னர் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்காக உணவை எடுத்து சென்றனர். மேலும், பாதிக்கப்பட்ட முரளி பாதிக்கப்பட்ட உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top