
செய்திகள்
நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை: மத்திய அரசு விளக்கம்..
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் மின்சாரத் தேவை கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் இந்த தேவை அதிகரிப்பு நாட்டின் பொருளாதர வளர்ச்சியை காட்டுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தாண்டு மார்ச் மாதம் அகில இந்திய மிந்தேவை 8.9% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் மின்சாரத்தேவை 215 முதல் 220 ஜிகா வாட் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று மதியம் 2.15 மணி அளவில் 201.066 கிகா வாட் மின்தேவை பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அரசு நாட்டின் தங்குதடையின்றி மின்சாரத்தை வினியோகிக்க அரசு பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
