சிக்கன் ப்ரைக்கு பதிலா இனி மீல் மேக்கர் ப்ரை பண்ணி பாருங்க! சுவை நாக்கிலே நிக்கும்!

அசைவ பிரியர்களுக்காக புதுசா இந்த மீல் மேக்கர் ப்ரை ரெசிபி .. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க சுவை நாக்கிலே நிக்கும்.

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 2 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டு
கரம் மசாலா – 1 தேக்கரண்டு
உப்பு – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 சிறிதளவு
அரிசி மாவு – 4 சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

கேரளா ஸ்டைல் தேங்காய் தால் ரெசிபி நம்ம வீட்டிலே செய்யலாமா!

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும், பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுக்க வேண்டும்.

அந்த மீல் மேக்கரை மிக்சர் ஜாரில் போட்டு பரபர பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனி தனியாக வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அதில் உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மீல் மேக்கர் ப்ரை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews