Connect with us

செல்பி மோகம்!! புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமானவர் சடலமாக மீட்பு!!

Capture 5

தமிழகம்

செல்பி மோகம்!! புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமானவர் சடலமாக மீட்பு!!

வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு மத்தியில் இளைஞர்களிடம் செல்பி மோகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் ஆபத்தை உணராமல் உயிரை விடும் சம்பவங்கள் தொடந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்த மங்களம்கொம்பு மலை கிராம பகுதியில் பரமக்குடியை சேர்ந்த 28 வயதான அஜய் பாண்டியன் .  இவர் கடந்த  ஆகஸ்ட் 3 ஆம் தேதி புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்திருந்தார்.

அப்போது கால் தவறிக் கீழே விழுந்த இளைஞர் அருவியின் ஆழத்திற்கு சென்று மாயமானார். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய நண்பர்கள் ஆத்தூர் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் இளைஞரின் உடலை மீட்க கடந்த 9 நாட்களாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் தற்போது நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞரின் உடலானது ஒரு வாரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top