முதல்வருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த வைகோ; அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக!

நம் தமிழகத்தின் தற்போதைய முதல்வரான ஸ்டாலின் தினந்தோறும் கடிதங்களை எழுதிக் கொண்டே வருகிறார். குறிப்பாக மத்திய அரசுக்கு தினந்தோறும் கடிதங்களை அனுப்பி வைப்பார் நம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

அதிலும் மீனவர்கள் விடுதலை பற்றி அடிக்கடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்புவார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோனியா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன்படி அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு சார்பாக கலந்து கொள்ளுமாறு கடிதத்தில் அறிவித்திருந்தார். தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்திந்திய சமூக கூட்டமைப்பில் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கூட்டமைப்பின் மதிமுக பிரதிநிதியாக வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் நலனை பாதுகாக்க கூட்டமைப்பு தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு 37 கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் மதிமுக இணைந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment