சென்னை மாநகராட்சியின் சொத்து வரி.. மேயர் ப்ரியா முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேயர் பிரியா இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் சொத்துவரி தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் வட்டி இல்லாமல் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ப்ரியா தலைமையில் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் துணை மேயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாகவே மேயர் ப்ரியா அறிவித்துள்ளார். இதனை அடுத்து கூடுதலாக 15 நாட்கள் சொத்து வரி செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.