1000 பேருக்கு கறி விருந்து வைத்த நாகர்கோயில் மாநகராட்சி மேயர்!

நாகர்கோயில் மேயர் துப்புரவுப் பணியாளர்களில் துவங்கி உயர் அதிகாரிகள் வரை என அனைவருக்கும் கறி விருந்து வைத்து அசத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயில் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. சமீபத்தில் நாகர்கோயில் மாநகராட்சித் தேர்தலானது நடத்தபட்டது. இந்தத் தேர்தலில் திமுக அதிமுக இடையே கடும் போட்டியானது நடைபெற்றது.

இறுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மகேஷ் வெற்றி பெற்று மேயரானார். பதவியேற்ற நாளில் மகேஷுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அதாவது திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட படு மகிழ்ச்சிக்கு ஆளானார்.

தன்னுடைய மகிழ்ச்சியினைக் கொண்டாட நினைத்து இருந்தநிலையில் மாமன்றக் கூட்டத்தில் அதனை செய்து முடித்துள்ளார். அதாவது மாமன்றக் கூட்ட முடிவில் துப்புரவு பணியாளர்களில் துவங்கி உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கறி விருந்து வைத்துள்ளார்.

இந்தக் கறி விருந்தில் மொத்தம 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.