மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு

கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது.

மாயவரத்தை சுற்றி பார்க்க கூடிய கோவில்கள் எண்ணற்றவை நீங்கள் ஒரு மாதம் தங்கி இருந்து பார்த்தாலும் கும்பகோணம் மற்றும் மாயவரத்தை சுற்றி பார்க்க கூடிய முக்கியமான வரலாற்று கோவில்களை பார்ப்பது கடினம் அவ்வளவு கோவில்கள் இந்த மாவட்டங்களை சுற்றி உள்ளன.

மாயவரம் எனப்படும் மயிலாடுதுறை நகரத்திலேயே புகழ்பெற்ற ஒரு கோவிலாக உள்ளதுதான் மாயூரநாதர் கோவில்.

தனது தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்காத காரணத்தால் சிவன் பார்வதியை அங்கு அனுப்பவில்லை. ஆனால் சிவனின் பேச்சை மீறி யாகத்திற்கு பார்வதி தேவி சென்றார். அதனால் சிவன் வீரபத்திரர் அவதாரம் எடுத்து யாகத்தை நிறுத்தினார்.

தன் சொல்லை மீறி யாகத்திற்கு வந்ததால் அம்பாளை மயில் வடிவம் எடுக்கும்படி சிவன் பணித்தார். அதனால் மயிலாக மாறிய அம்பாள் இந்த கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து சிவனை நோக்கி தவமிருந்தார்.

சிவனும் இங்கு மயில் வடிவத்தில் வந்து அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து அவருக்கு கெளரி தாண்டவ தரிசனம் அம்பாளின் சுயரூபம் பெற அருள் செய்தார்.

சிவன் மயில் வடிவத்தில் வந்து அருள் செய்ததால் மாயூரநாதர் என பெயர் பெற்றார்.

இந்த வரலாற்றின் அடிப்படையில் உருவான கோவில் இது.

செய்த பாவங்களுக்கு இங்குள்ள துலா கட்ட காவேரியில் நீராடி மயில் வடிவத்தில் சிவனை நோக்கி வணங்கி இருக்கும் அம்பாளையும் சிவனையும் தரிசித்தால் செய்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நந்தியின் கர்வத்தை சிவபெருமான் நீக்கிய இடம் மற்றும் கங்கை இங்கு நீராடி தன் பாவங்களை போக்கி கொண்டதால்  இந்த இடம் மிகுந்த புண்ணிய இடமாக கருதப்படுகிறது.

எல்லா இடத்திலும் பார்வதி தேவியிடம்தான் முருகன் வேல் வாங்கி சூரசம்ஹாரம் நடக்கும் இங்கு மட்டும் சிவனிடம் வாங்கி சூரசம்ஹார விழா நடக்கிறது.

மயிலாடுதுறை செல்லும்போது கண்டிப்பாக காண வேண்டிய கோவில் இது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews