மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி

தமிழ்நாட்டில் சோழமண்டலம் என அழைக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், மாயவரம் எனும் மயிலாடுதுறையை சுற்றிதான் அனைத்து பெரும்பான்மை கோவில்களும் உள்ளன.

இந்த கோவில்களுக்குத்தான் பரிகார ரீதியாக தமிழ்நாடு முழுவதும் இருந்து அனுதினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மயிலாடுதுறையில் புகழ்பெற்றது துலா கட்ட தீர்த்தம் கும்பகோணத்தில் மகா மக தீர்த்தம் போல மயிலாடுதுறையில் துலா கட்ட தீர்த்தமும் உள்ளது.

இந்த தீர்த்த கட்டத்தில் 18 வருடத்துக்கு ஒரு முறை காவிரி புஷ்கரம் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிபுஷ்கரம் இங்கு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கடைமுக தீர்த்தவாரி எனும் விழா நேற்று நடைபெற்றது.

மயிலாடுதுறையின் முக்கிய கோவில்களான மாயூர நாதர் கோவிலின் மாயூரநாதர், அபயாம்பிகை, அறம் வளர்த்தநாயகி சமேத ஐயாரப்பர் ஸ்வாமி, தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான  வதானேஸ்வரர் ஸ்வாமி, காசி விசாலாட்சி அம்பாள் உள்ளிட்டவர்கள் இந்த துலா கட்டத்தில் எழுந்தருளினர்.

இங்கு குவிந்த பக்தர்கள் துலாகட்டத்தில் நீராடி  மாயூர நாதர், அபயாம்பிகை, அறம்வளர்த்த நாயகி, ஐயாரப்பர். வதானேஸ்வரர், காசி விசாலாட்சியிடம் தங்கள் வேண்டுதல்களை கூறி வழிபட்டனர்.

இந்த விழாவில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டன. இப்பகுதியில் பல கோவில்களை நிர்வகித்து வரும் தருமபுரம் ஆதினம் முன்னிலையில் இந்த தீர்த்தவாரியும் ஆராதனை அபிசேகங்களும் நடைபெற்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print