மீனவர் ராஜ்கிரன் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்! சந்தேகத்தில் மனைவி;

நம் தமிழகத்தில் அதிகளவு பாதிக்கப்படுவது யார் என்றால் மீனவர்கள் என்றுதான் கூறலாம். என்றால் அவர்கள் மழைக்காலத்தில் கடலுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படும், மழை காலம் இல்லாத நேரத்தில் கடலுக்கு சென்று மீன் பிடித்தால் அவ்வப்போது இலங்கை கடற்படையினால் சுட்டுக் கொல்லப்படுவர்.

ராஜ்கிரண்

பல நேரங்களில் இலங்கை கடற்படையினர் கைதிகளாக சிறைபிடித்து செல்வர். இலங்கை கடற்படை கப்பல் இடித்ததில் ராஜ்குமார் என்ற மீனவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரின் மரணம் குறித்து ராஜ்குமாரின் மனைவி பிருந்தாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து நீதிபதி சுவாமிநாதன் சில அதிரடி உத்தரவில் கூறியுள்ளார். அதன்படி மீனவர் ராஜ்கிரண் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அதை எளிதாக விட்டுவிட முடியாது என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இறந்த மீனவரின் மனைவி பிருந்தாவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்ப்பது அரசின் தலையாய கடமை என்றும் நீதிபதி சுவாமிநாதன் கூறியுள்ளார். இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இடித்ததால் மீனவர் ராஜ்கிரன் கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.

இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மனைவி  பிருந்தா சந்தேகம் எழுப்பியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பெட்டியில் இருந்த கணவரின் உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனர் என்றும் பிருந்தா கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment