சில வருடங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் சாலைகள் தெரியாத அளவிற்கு காற்று மாசுபாடு காணப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் விடியற்காலையில் போது கூட வாகனத்தில் விளக்குகள் உபயோகித்தே பயணித்தனர்.
இவ்வாறு இருந்த காற்று மாசுபாட்டை கடின முயற்சியினால் டெல்லி அரசு கட்டுப்படுத்தி இருந்தது. ஆனால் தீபாவளி அன்று எதிர்பாராத விதமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசினை பல்வேறு கேள்விகளை கேட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக டெல்லியில் அதிக அளவு பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அதற்கு மத்திய அரசு சில தகவல்களை கூறியுள்ளது. அதன்படி பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு 10% தான் ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல் அளித்துள்ளது.இதனால் டெல்லியில் பெரும்பாலான காற்று மாசு பயிர் கழிவுகளை எரிப்பதால் நிகழவில்லை என்று கூறியுள்ளது.
காற்று மாசை குறைக்க டெல்லியில் போக்குவரத்துக்கு மூன்று நாள் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.