அடுத்த 2 நாட்களுக்கு உச்சத்தை தொடும் வெப்பநிலை!

தமிழகத்தில் இன்றும் (14.04.2023) நாளையும் (15.04.2023) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 17 வரை வறண்ட வானிலை நிலவும் என்றும், ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற அண்ணாமலை முயற்சி: கனிமொழி

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.