மழைப்பொழிவு நிலவரம்: தமிழகத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழைப்பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பெய்த கனமழை பற்றிய நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரிமாவட்டத்தில்  சுருளக்கோட்டில் 15 சென்டிமீட்டர் மழை பொழிவு பெய்துள்ளது.

மழைப்பொழிவு

கன்னிமார், ஏற்காடு பகுதிகளில் தலா 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணை,புத்தன் அணை பகுதிகளில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருத்தணி பகுதியில் தலா 12 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

வாலாஜா, பள்ளிப்பட்டு, பூதப்பாண்டி பகுதியில் தலா 11 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மயிலாடி, சோழவரம், கலசப்பாக்கம் பகுதியில் தலா 10 சென்டி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

வானிலை மையம்

கும்மிடிப்பூண்டி பகுதியில் 9 சென்டிமீட்டர் மழையும், சென்னை டிஜிபி அலுவலகம், ஊத்துக்கோட்டை, வேப்பாக்கம், ஜமுனாமரத்தூர் இல் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை ஆட்சியர் அலுவலகம், எம்ஜிஆர் நகர், அயனாவரம், ஏற்காடு, காஞ்சி கொட்டாரத்தில் தலா ஏழு செண்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நாகர்கோயில், அரக்கோணம், சோளிங்கர், பொன்னேரி காட்பாடியில் தலா ஏழு சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

சென்னை எம் ஆர் சி நகர், நுங்கம்பாக்கம், திருவலாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுக்குன்றத்தில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தர்மபுரி, ஆம்பூர், தரமணி, ஆலந்தூர், செங்கம், பேச்சிப்பாறை, திருவண்ணாமலையில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை, திருவள்ளூர், அண்ணா பல்கலைக்கழகம், பெரம்பூர், கேளம்பாக்கம், திருப்பத்தூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகம், ஆர்.எஸ். மங்கலம், பூண்டி, தக்கலை, ஆர்.கே.பேட்டை, திருப்பத்தூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வாணியம்பாடி, அம்பத்தூர், டேனிஸ்பேட்டை ,பரமக்குடி, வேலூர், குளித்துறை பாப்பிரெட்டிப்பட்டியில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி சென்னை விமான நிலையம், மாமல்லபுரம், வாலாஜாபாத்தில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment