News
தமிழகத்தில் அதிகபட்சமாக மழைப்பொழிவு “நத்தம்” பகுதியில் பதிவு!
தற்போது நம் தமிழகத்தில் காற்றுக் காலம் இருக்கிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் காற்றானது சூறைக்காற்று போல அடிகிறது. மேலும் பல பகுதிகளில் வெப்பம் குறைக்கப்பட்டு இதமான வானிலை இந்த காற்று கொண்டு செல்கிறது. நம் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகின்றன. சென்னை வானிலை ஆய்வு மையம் சில இன்பமான தகவல்களையும் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ஜூன் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது மேலும் இந்த பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நான்கு சென்டிமீட்டர் மழையானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து காரைக்குடி பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது இதனால் தமிழகத்தில் கடன் 24 மணி நேரத்தில் நத்தம் பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
