மீண்டும் தொடங்கிய மாவீரன் படப்பிடிப்பு – அதிதி வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காமெடி மற்றும் காதல் கலகலப்பு கொண்டு படமாக உருவானது, படம் கலவையான விமர்சனக்களை பெற்றது வசூல் சாதனை படைக்க தவறியது.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பதாகையின் கீழ் அருண் விஸ்வா தயாரிக்கயுள்ளது. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாவீரன் படப்பிடிப்பு கருத்து வேறுபாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக்க தகவல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் மீண்டும் தொடங்கும் என்பது லேட்டஸ்ட் தகவல் . இந்த புதிய ஷெட்யூலில் சிவகார்த்திகேயன் மற்றும் பிற முன்னணி நடிகர்கள் செட்டில் இணைவார்கள்.

athithi

இப்படத்தில் சரிதா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த கார்த்தியின் சர்தார்! மாஸ் அப்டேட்!

இந்நிலையில் படம் குறித்த அனைத்து குழப்பத்திற்கும் தீர்வாக அதிதி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.