Connect with us

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: வெளியானது அதிரடி அப்டேட்!!

education department

Tamil Nadu

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: வெளியானது அதிரடி அப்டேட்!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு முறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம், பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என அமைச்சகம் கூறியுள்ளது.

அதே போல் பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் இடஒதுக்கீட்டை மதிப்பெண் அடிப்படையில் மட்டும் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. அந்த வகையில் இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து பிரிவினரிடமும் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இத்தகைய நடைமுறையானது சரியான முறையில் செயல்படுகிறதா? என்பதனை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அரசு  தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top