Connect with us

அஜீத்தை வம்புக்கு இழுத்த மதிமாறன்

பொழுதுபோக்கு

அஜீத்தை வம்புக்கு இழுத்த மதிமாறன்

திராவிடர் கழக பேச்சாளர்களில் சமீப காலமாக புகழ்பெற்று வருபவர் மதிமாறன். டிவி விவாதங்களிலும் பொது மேடைகளிலும் பேசி வருகிறார். திமுக வின் பொது மேடைகளிலும் பேசி வருகிறார்.

a858bed7d0afb2af2a9915cbad0946d0

சில நாட்கள் முன் விஜயை தளபதி என ரசிகர்கள் சொல்வதற்கும், சர்கார் பட விழாவில் அரசியலுக்கு வருவதுபோல் விஜய் பேசியதற்கும் சேர்த்து இவர் பேசினார். திமுக மேடையில் பேசிய தளபதி ஒருவர்தான் வேற யாருமில்லை என ஸ்டாலினை புகழும் வகையில் பேசினார்.

இந்த நிலையில் பாஜக வை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.

சமீபத்தில் அந்த அம்மா தமிழிசை அஜீத் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவு போல பேசியது. அந்த அஜீத் எப்படிப்பட்ட ஆளு எதற்கும் வாயை திறக்காதவர். கலைஞர் முன்னால எல்லா விழாவுக்கும் வலுக்கட்டாயமாக கூப்பிடுறாங்க என பேசியவர் அப்படிப்பட்ட பேச்சு சுதந்திரத்தை கொடுத்திருந்தாரு. இந்த அஜீத் சமீபத்துல வந்ததே விஸ்வாசம் அந்த படத்துல கட் அவுட் வச்ச இளைஞர் மேல இருந்து விழுந்துட்டாரு அத ஏன்னு அவர் கேட்கலை. அப்பாவ நெருப்பு வச்சுட்டான் ஒருத்தன் அதாவது படம் பார்க்க காசு தரலைன்னு அப்பாவ ஒருத்தன் கிருஷ்ணாயில ஊத்தி கொளுத்திட்டான் அவன ஏன்னு கேட்கல அதற்கெல்லாம் ஏன்னு கேட்காத மனுஷன் தமிழிசையோட அஜீத் ரசிகர்கள் ஆதரவு என்ற நிலைப்பாட்டை பார்த்து டக்குன்னு அறிக்கை விட்டுட்டாரு. அந்த அளவு எல்லோரும் தாமரையின் மீது வெறுப்பா இருக்காங்க என்ற பொருள்படும்படி மதிமாறன் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top