பிரசவத்தில் பஞ்சு வைத்து தைத்தால் கர்ப்பிணி மரணம்! பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் இருக்க வேண்டும்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டு வருகிறது. இவை பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஏனென்றால் பிரசவ காலத்தில் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் தடுக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டுமென்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. உறுதி செய்ய தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது வயிற்றில் பஞ்சு வைத்து வைத்ததால் பிரியா என்பவர் உயிரிழந்தார். கர்ப்பிணிப்பெண் பிரியா மரணத்தால் உறவினர்கள் போராட்டம் தொடர்பான செய்தி அடிப்படையில் வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment