மாணவிகள் கர்ப்பமானால் மகப்பேறு விடுமுறை: கேரள பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு விடுக்கப்படுவதுபோல் மாணவிகள் கர்ப்பம் ஆனால் அவர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் கர்ப்பம் ஆனால் அவர்களுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பம் கலைப்பது போன்றவற்றுக்கும் 14 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் இருக்கும் கர்ப்பிணி மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு எழுதவும் மற்ற தேர்வுகள் எழுதவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முதல் முறை கர்ப்பமாகும் மாணவிகளுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் மூன்று ஆண்டு படிப்பில் ஒரே ஒரு முறை மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது

கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பொருந்தும் என்றும் தகுந்த மருத்துவ சான்றுகளுடன் கர்ப்பமான மாணவிகள் மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.