கட்டுப்படுத்த முடியல; டிசம்பர் மாசத்திலிருந்து ஒரு ரூபா தீப்பெட்டி இரண்டு ரூபா!!

நம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பான தொழில் காணப்படும். நம் தமிழகத்தில் ஏராளமான குடிசைத் தொழில்களும் உள்ளன. குறிப்பாக தீப்பெட்டி தயாரித்தல் மிகப்பெரிய அளவிலான தொழிலாகும்.தீப்பெட்டி

நம் தமிழகத்தில் அதிகமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திடீரென்று தீப்பெட்டி விலை உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இன்றைய தினம் தீப்பெட்டி உரிமையாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த சங்க கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டியின் விலையை உயர்த்த ஒருமனதாக சங்க நிர்வாகிகள் தீர்மானம் செய்துள்ளனர்.

மூலப்பொருள் விலை உயர்வால் இத்தகைய விலை அதிகரித்து காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மூலப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல், வாடகை போன்றவைகளும் அதிகரித்ததால் செலவு அதிகரித்துள்ளது.

இதனால் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டி ஆனது விலை உயர்கிறது. அதன்படி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி  டிசம்பர் மாதத்திலிருந்து இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment