நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன் வரிசையில் தற்போது தீப்பெட்டி விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்கப்படுகிறது.
இது குறித்து அக்டோபர் மாதத்தில் சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க குழு அதிரடி முடிவு எடுத்தது. அதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் தீப்பெட்டி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூறியிருந்தது.
ஏனென்றால் பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு போன்றவற்றின் விலை உயர்வும், வாகன வாடகை பெட்ரோல், டீசல் விலை உயர்வும் தீப்பெட்டி தொழிலை மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டியின் விலை அதிகளவில் காணப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி இன்றைய தினம் முதல் தமிழகத்தில் தீப்பெட்டி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால் பலரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகின்றது. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன .தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்கள் பணியில் உள்ளனர்.