Connect with us

போட்டி ரத்து: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்

Sports

போட்டி ரத்து: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்

c4db8094ae3b77f9673709fb83939242

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ள நிலையில் திடீரென போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்களும் எடுத்தன. இந்திய அணி முதல் இன்னிங்சில் 268 ரன்கள் எடுத்ததால் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து உள்ளதால் இன்னும் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையை இன்று 5வது நாள் ஆட்டம் தொடர்வதற்கு முன்பாக மழை பெய்ததை அடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 157 என்ற எளிய இலக்கை இந்தியா எட்டிவிடும் என்ற நிலையில் இன்று மழை பெய்து வருவதால் இந்தியாவின் வெற்றி வருண பகவானால் பறிபோய்விடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top