உயிரிழந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை செய்யப்பட்டாரா? பரபரப்பு தகவல்!

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் சமீபத்தில் காலமான நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்பி மஸ்தான் என்பவர் கடந்த 22ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்றும் அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் எம்பி மாஸ் தான் மரணத்தில் டிரைவர் உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தான் ரகசிய இடத்தில் அவரை கொலை செய்ததாகவும் கூறப்பட்டது.

முன்னாள் எம்பி மஸ்தான் இம்ரான் என்பவருக்கு பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பி கேட்டதால் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இம்ரான் உள்பட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் மஸ்தானின் டிரைவரும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.