OTTல் வெளியானது சென்சார் கட் இல்லாத மாஸ்டர்!!!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியானது.

இந்நிலையில் அமேசானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் சென்சார் கட் இல்லாத படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் உடன் கூடிய மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

ஆனால் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்ற நிலையில் சென்சார் கட் இல்லாத படமென்றால் மேலும் சில நிமிடங்கள் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.