தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் அதன்பின்னரும் ஓடிடியில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது
விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் ஹிந்திக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
ஹிந்தியிலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அவர் இயக்குவதாக இருந்த விக்ரம் திரைப்படம் காலதாமதம் ஆவதால் அவர் மாஸ்டர் ஹிந்தி படத்தை இயக்கி விட்டு அதன் பின்னர் விக்ரம் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது
ஹிந்தியில் விஜய் வேடத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.