தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று சுமார் ஒரு மணி நேர காட்சிகள் இன்டர்நெட்டில் லீக் ஆனதாக வெளியான தகவல் படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது
இதனையடுத்து நேற்று தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் உள்பட படக்குழுவினர் தங்களது சமூக வலைதளங்களில் ‘மாஸ்டர்’ படத்தில் லீக்கான காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்றும் லீக் செய்வது குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒரே ஒரு நாள் பொறுத்துக் கொள்ளவும் என்றும் திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கவும் என்றும் இந்த படம் ஒன்றரை வருடமாக பலரின் உழைப்பால் உருவானது என்றும் அவர்கள் உருக்கமாக தெரிவித்து இருந்தனர்
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தனியார் டிஜிட்டல் நிறுவன ஊழியர் ஒருவர் தான் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் காட்சிகளை இணையத்தில் லீக் செய்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நபர் மீது தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விரைவில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து எடுத்த ஒரு திரைப்படத்தை இன்டர்நெட்டில் லீக் செய்வது என்பது எந்த அளவுக்கு மோசமான ஒரு செயல் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர் ஆனால் அதே நேரத்தில் ஒரு சில காட்சிகள் லீக் ஆனதால் படத்தின் வசூல் எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் கண்டிப்பாக திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து மகிழ்வார்கள் என்றும் படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றன