தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்களின் கூட்டம் கடல் போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மதுரையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் சூரி ’மாஸ்டர்’ திரைப்படமாக மாஸ் ஆக இருப்பதாகவும், இது விஜய் ரசிகர்களுக்கான படம் என்றும் கூறினார். மேலும் இளையதளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை மதுரையில் பார்க்க நான் ஆசைப்பட்டேன் என்றும், இன்று அந்த படத்தை ஆசைப்பட்டபடியே பார்த்தேன் என்றும், அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து அப்படி என்ஜாய் பண்ணுகிறார்கள் என்றும், படம் ரொம்ப நன்றாக இருந்தது, சூப்பராக இருக்கின்றது என்றும் சூரி கூறினார்.
மேலும் இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்தான் என்றும், இந்த படத்தை நான் மதுரையில் பார்த்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும், படம் சூப்பராக உள்ளது அதை விட தியேட்டர் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். சூரி ’மாஸ்டர்’ படத்தை பார்த்த தியேட்டர் மதுரை அன்புக்கு சொந்தமான தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது