மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக நேற்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை மட்டுமே இப்படம் திருப்திப்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் முழுதும் 50% இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டது.
மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை, சென்னை திரையரங்குகளில் குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்கங்கள் இதை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.
இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதை தொடர்ந்து தமிழகத்தில் இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டம் இடத்தை பிடித்துள்ளதாம்.
இதன் மூலம் எப்படியும் ரூ 22 கோடி வரை இப்படத்தின் முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக இந்த கொரொனா சமயத்தில் இப்படியான வசூல் திரையரங்க உரிமையாளர் எல்லோருக்குமே நிம்மதி தான்.